Monday, July 26, 2010

இந்தி வெறியர்களின் மற்றுமொரு ஆட்டம்

நன்றி:குமரிக்கண்டம் வலைப்பூ நன்றி:நக்கீரன்இணையதளம்                                                                      வட இந்திய இந்தி ஆதிக்க வெறியின் அடுத்த கட்டம். அமெரிக்கா, பிரிட்டன், யூரோவுக்கு உள்ளது போல் இந்திய ரூபாயுக்கு குறியீடு என்பது இதுவரை இருந்தது இல்லை. அதை போன்று ஒரு குறியீடு தேவை என்று சென்ற வருடம் முடிவு செய்யப்பட்டு, வடிவமைக்க போட்டியும் நடத்தப்ப்ட்டது. இதில் இந்திய மூழுவதும் பலர் கலந்து கொண்டனர். அதில் தமிழகத்தை சேர்ந்த் உதயகுமார் வடிவமைத்த மேலே உள்ள குறியீடு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. 

இது பார்க்க R என்பதின் பாதிவடிவமும் = என்ற குறியீடும் இருப்பதாக நினைக்கலாம். ஆனால் இது "र"இந்தி எழுத்து.




உதயகுமார் தனது பேட்டியிலேயே இதை தெரிவித்துள்ளார். இவர் முன்னாள் தி.மு.க சட்டமன்ற உறுப்பினரின் மகன் ஆவார்.

ஆங்கில நாடுகள் அவர்களின் பொது மொழியில் அவர்களின் பணத்திற்கான குறியீட்டை வைத்துள்ளார்கள். ஆனால் இந்தியாவில் இந்தி இன்னும் பல மாநிலங்களில் பொது மொழியாக ஆங்கிகரிக்கப்படவில்லை. அப்படி ஒரு சூழ்நிலையில் இந்தி எழுத்தை அனைவரும் பயன்படுத்தும் பணத்திற்கு குறியீடாக வைக்கிறார்கள் இந்தி ஆதிக்க வெறியினர். 

இந்தியா என்ற நாடு பல இன மொழி மக்கள் இணைந்து வாழும் நாடு என்று வாய்கிழிய கத்தும் இவர்கள். (Unity in Diversity) இப்படி சொல்பவர்கள் இந்தியாவின் அத்தனை கலாசாரம் மற்றும் பண்பாட்டை வெளிபடுத்தும் ஒரு குறியீட்டை தான் தேர்வு செய்து இருக்க வேண்டும். ஆனால் இங்கு அவர்கள் கடைசிகட்டமாக 5 வரைபடங்களை தேர்வு செய்துள்ளனர் அந்த ஐந்துமே இந்த இந்தி எழுத்தை அடிப்படையாக கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது. 


இந்த குறியீட்டை இனி அனைவரும் பயன் படுத்த வேண்டும். புறக்கடை வழியாக அனைவரையும் இந்தியை பயன் படுத்தவைக்கும் முயற்சி. இந்த இந்தி ஆதிக்க வெறியர்களின் இந்த முயற்சிக்கு நமது தமிழ் மகனும் துணை போய் உள்ளது தான் மிகவும் கொடுமை. இதற்காக இவருக்கு கிடைத்த பரிசுபணம் இரண்டரை லட்ச ரூபாய். இந்திய ரூபாய் குறியிட்டின் நோக்கம்இந்திய ரூபாய் நோட்டிற்கு புது குறியீட்டை மந்திரிசபையும் அனுமதித்து விட்டதாம். பேரம் பேசி மந்திரி பதவி வாங்கிய தமிழக மந்திரிகள் இந்தி திணிக்கப்படுவது கண்ணுக்கு தெரியவில்லை போலும். எப்படி தெரியும் பேரம் பேசி சோரம் போனவர்கள் தானே.இந்த புது குறியீட்டின் அர்த்தம் என்று மூன்று விசயங்கள் சொல்லி இருக்கிறார்கள். ஒவ்வொன்றாக பார்க்கலாம். 

1."र" என்ற இந்த எழுத்து, தேவநாகரி எழுத்துவடிவம்.
2.மேலே உள்ள கோடு தேவநாகரியில் சிர்ரேகா என்ற தலமை கோடு ஆகும்
3.அதற்கு அடுத்து இடைவெளிவிட்டு கிழே கொடுக்கப்பட்டுள்ள கோடு மேல் கோடு, இடைவெளி அனைத்தும் சேர்த்து மூவர்ணகொடியை குறிக்கிறதாம்.

தேவநாகரி எழுத்து என்று சொல்லும் "र" எழுத்து இன்று வரை பயன்பாட்டில் உள்ள ஹிந்தி எழுத்து. சமஸ்கிருதத்திலும் இதே எழுத்து தான் குறிக்கப்படுகிறது.. இதன் ஒலி தமிழில் "ர"வை ஒத்து வரும். இந்தியாவின் இறையாண்மை அனைத்து மக்களையும் அனைத்து சமூகத்தை காப்பாற்றுவதாக சொல்லும் பொழுது. ஒரு சில மொழிகளில் மட்டும் வரும் எழுத்தை அடிப்படையாக வைத்துக் கொள்ளலாமா. 

ஏற்கனவே ஒருத்தர் கேள்வி எழுப்பினார், முதல் மூன்று மொழிகள் என்று சொல்லி. இந்திய தற்போதைய ரூபாய் நோட்டை எடுத்து பார்த்திர்கள் என்றால் அந்த ரூபாய் நோட்டின் மதிப்பை ஒரு பகுதியில் பதினைந்து மொழிகளில் பதிந்து இருப்பார்கள். இப்படி அனைத்து மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட இந்திய ரூபாயை குறிக்க ஒரு சில மொழிகள் பயன்படுத்தும்(வடமொழிகள்) எழுத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கலாமா??

இரண்டவதாக சொல்லி உள்ளதும் தேவநாகரி எழுத்தில் தலைமை வரி கோட்டை குறிப்பிடுகிறார்கள்.. ஹிந்தி யில் கடிதம் எழுதும் பொழுதோ இல்லை ஒரு பத்தியாக எழுதும் பொழுதோ இந்த கோட்டை பயன்படுத்துவதில்லை. ஆனால் ஹிந்தி படிக்க ஆரம்பிக்கும் பொழுது அதாவது தமிழில் அரிச்சுவடி இருப்பது போல் அங்கும் உண்டு. அதில் கோட்டுடன் எழுதத்தான் சொல்லி கொடுப்பார்கள். ஹிந்தி பேப்பர்கள் அனைத்திலும் பார்த்தால் கோட்டுடன் தான் இருக்கும். ஹிந்திக்கு இதற்கும் சம்பந்தமில்லை தேவநாகரி தான் பிரதானம் என்று சொல்லாமல் சொல்லுகிறார்கள். 

எனென்றால் இன்று வரை செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் முடிவு தேவநாகரி, கிரந்த எழுத்துகள் போன்றவைதான் பழமையானது என்று முடிவுக்கு வந்துள்ளனர். ஆதிச்சநல்லூர் அகல்வராய்ச்சி 2005ம் ஆண்டு நடந்தது இன்று வரை அதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை (அந்த இடத்தை பாதுகாப்பன பகுதியாக அறிவித்து வேறு யாரையும் ஆராய்ச்சி செய்ய கூடாது என்று தடை விதித்துள்ளனர்). இந்த மொழிகளில் இருந்து தான் அனைத்தும் தோன்றியது என்பது தான் ஆராய்ச்சிகளின் முடிவு. சம்ஸ்கிருதம் தான் முதல் மொழி என்பதை நிலைப்படுத்தவே இந்த குறியீட்டு விளையாட்டு. 

அடுத்து மூவர்ணகொடியை குறிக்க இரண்டு கோடுகளும் அதன் நடுவில் உள்ள இடைவெளியாம். மூவர்ண கொடியை குறிக்க கருப்பு கோடுகள். கருப்பு என்பது துக்கத்தை குறிக்க தானே??? சின்ன சந்தேகம் ஹி ஹி ஹி இதைப் பற்றி நான் பேசவேண்டாம் இந்திய தேசியவாதிகள் பேசிகொள்ளட்டும். 

ஒரு நாட்டில் அனைத்து மக்களும் பயன் படுத்தும் பணத்தின் குறியீடு அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும். அப்படி ஒன்றை வைக்கும் பொழுது அதை ஆதரிக்கலாம். 

இப்படி எழுதுவதால் தவறாக நினைக்க வேண்டாம். எனக்கு ஹிந்தி எழுதப் படிக்க பேசத் தெரியும். அனைத்து மொழிகளையும் அனைவரும் படிக்க வேண்டும் என்பதே என் வாதம். ஆனால் அது கட்டயமாக திணிக்கப்படுவதை சகித்துக் கொள்ள முடியாது. 

கடைசி தகவல் ராண்டி என்னும் இந்தி சொல் இதே எழுத்தில் தான் ஆரம்பிக்கும், அதன் தமிழ் அர்த்தம் விலைமாது. பணமும் கைக்கு கை மாறுவதால் இந்த எழுத்தை தேர்ந்து எடுத்து இருப்பாரோ உதயக்குமார்.                                                                                                             கருத்துக்கள் [24]

Date :7/22/2010 4:34:31 PM
700 Km சிங்கப்பூரில் தமிழும் ஒரு அரச மொழி.
Name : thamizhDate :7/22/2010 4:27:23 PM
இந்திய அரசியல் சாசன சட்டத்தின் முதல் பக்கமே "இந்திய ஒரு ஒன்றியம்" என்று தான் குறிபிடுகிறது ஆம் இங்கு நாம் தமிழன்,கன்னடன்,தெலுங்கன் என தேசிய இனமாக உள்ளோம் இந்தியாவில் குடியுரிமை பெற்று உள்ளோம் இந்தியன் என்று ஒன்று வரலாற்றில் இருந்ததே இல்லை (ஆதாரம் முரசொலி மாறன் எழுதிய "மாநில சுயாட்சி& ஏன் வேண்டும் இன்ப திராவிடம்" நூல்கள்) நாம் தமிழ் தேசிய இனத்தை சேர்ந்தவர்கள் ரூபாய் குறியீட்டின் வழி ஹிந்தி ஆதிக்கத்தையும், மாற்று தேசிய இன மக்களை இரண்டாம் தர குடிமக்களாய் ஆக்கும் இந்த அராஜக போக்கை கண்டிப்போம் இது தமிழர்களை மட்டுமல்ல இந்தியாவில் உள்ள ஹிந்தி தவிர்த்த அத்தனை தேசிய இன மக்களையும் கொச்சைபடுத்தும் செயல் "ஒரு இனத்தை அழிக்க முதலில் அதன் மொழியை அழி"-என்பது பாசிச ஹிட்லர் வெறி அதை செய்து இந்திய மையா அரசின் இந்த மக்கள் விரோத போக்கை கண்டிக்க அணைத்து தேசிய இன மக்களே கைகோருங்கள். "இந்திய தேசிய இனங்களின் சிறைக்கூடம்"
Name : RADJY NirmalDate :7/22/2010 1:33:12 PM
நம்ம நாட்டுக்கு என்று ஒரு மொழி தேவை அது என்ன இந்தியாக இருக்ககூடாது. இன்னும் தமிழனை மொழி மொழி என்று சொல்லி கொண்டு அவனை முன்னேற விடாமல் தயவு செய்து தடுக்காதீங்க. வேற வேலை இருதா பாருங்க... தமிழ் மட்டும் தெரிந்ததால் பாதிக்கபட்டோர் சங்கம் ..
Name : Ranga NathanDate :7/21/2010 1:27:46 PM
இது ஒன்றும் புதியது இல்லை. தமிழன் மானத்தோடு வாழ ஓர் ஊர் இல்லை. நீங்கள் ஒன்றும் செய்யபோவதும் இல்லை. உங்கள்ளால் அது முடியாதது. ஹிந்தியை படியுங்கள்.
Name : sajithDate :7/21/2010 10:19:44 AM
போங்கடே ஓங்க தமிழும் .................ம்,நாம் இந்தியா வில் வாழ்கிறோம் என்பதை மறந்து விடாதிர்கள்
Name : sailashDate :7/19/2010 10:45:36 PM
சரி பல மொழி பேசும் மக்கள் உள்ள நாட்டில் ஒரு மொழியில் அதாவதி ஹிந்தியில் இருக்க கூடாது !! அப்போ எந்த மொழியில் இருக்கலாம் ?? ஆங்கிலத்திலா ?? இந்தியாவில் ஹிந்தி தெரிதவர்களை விட ஆங்கிலம் தெரிந்தவர்கள் அதிகமா ?? என்ன கொடுமை ?? அது எப்பை ஆங்கிலத்தை ஒத்து கொள்ளும் பகுத்தறிவு கூட்டம் , ஹிந்தியை மட்டும் எதிர்கிறது !! அது சரி ஆங்கிலேயேன் தானே வெளியே போனான் , அடிமைத்தனம் இன்னும் இருக்கிறதே !
Name : ParthaDate :7/19/2010 9:10:59 PM
அவமானம். அவமானம், ஒரு தி. மு. க. குடும்ப தமிழன் ஹிந்தி மொழி சின்னத்தை உருவாக்கியது. அதை தமிழக மத்திய மந்திரிகள் தேர்வு செய்ய உதவியது பெரும் தொரகம். இவர்கள் பார்பன செயலாளர்களின் யோசனை படி செயல் பட்டனரோ? பார்பனர்கள் ஒழிக. ஹிந்தி ஒழிக.
Name : அன்பன்Date :7/19/2010 5:42:26 PM
தன்மானம் இல்லாத தமிழனிடம் என்ன சொன்னாலும் அவன் சட்டை செய்ய போவதில்லை. இனி தமிழ் மெல்ல சாகும்! மிக்க வருத்தங்களுடன்
Name : mannanDate :7/19/2010 11:53:57 AM
அருமையான கட்டுரை . வாழ்த்துகள்
Name : ManithanDate :7/19/2010 11:52:35 AM
தன்மானம் இல்லாத தமிழர்களாய் போய்விட்டோம் . இங்கு கமெண்ட் எழுதி இருக்கும் வாசகர்களை பார்த்தாலே தெரிகிறது. அவர்கள் ஹிந்திக்கு விலை போகவிட்டார்கள். இவர்களின் பிள்ளைகல்லுக்கு கூட இவர்கள் தமிழ் சொல்லி கொடுபதில்லை. ஹிந்தி பெயர்களை தான் வைகிறார்கள் . பணத்திற்காக ஹிந்தியை படி என்று சொல்லுகிறார்கள் . ஹிந்தி படித்து வெளி நாட்டில் எந்த வேலையும் செய்ய போவதில்லை . வெளி நாட்டில் ஹிந்தி அவசியமும் இல்லை . தமிழ்நாட்டில் வேலை பார்த்தாலே போதும் . இவன் டெல்லிக்கு போய் என்ன செய்யப்போகிறான். என் சிங்களவனை ஹிந்தி படிக்க சொல்லுங்கள் . அவன் செருப்பால் அடிப்பான். அப்படிதான் தமிழனும் . நமக்கு மொழி பற்று இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு ஜப்பானியர் ஒரு உதாரணம் . முதலில் நம் தாய் மொழியை நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் . பிறகு அந்நிய மொழியான இந்தியை கற்காலம் . ஆங்கிலமும் தாய் மொழி தமிழுமே நமக்கு போதும் தரணியை ஆள்வதற்கு
Name : pakutharivuDate :7/18/2010 5:39:18 PM
திருவாளர் தறுதலை எழுதியதை நம்பவேண்டாம். அவரைப்பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவர் ஒரு பார்ப்பன அடிவருடி. தன்னை ஒரு பார்ப்பனுக்கு நிகரான பார்பான் என்று பெருமையடித்து கொள்பவர். சமூக நீதிக்கான இடஒதுகீடுக்கு எதிரானவர். இவரைப்பற்றி மேலும் அரிய www.tamilnadutalk.com போய் பார்க்கவும்.
Name : Speak HindiDate :7/18/2010 5:09:22 PM
இதுல என்ன தவறு இருகின்றது என்று தெரியவில்லை ஒவ்வரு தமிழனும் கண்டிப்பாக ஹிந்தி படிக்கணும் இல்லேன்னா நம்மளால் சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் கூட தாண்ட முடியாது வெளி நாட்டில் வேலை பார்க்கும் தமிழர்கள் ஹிந்தி தெரியாமல் எவ்வளவு கஷ்டபடுகிறார்கள் என்று அவர்களிடம் கேட்டு பாருங்கள் மற்ற நாட்டை சேர்ந்தவர்கள் கூட ஹிந்தி பேசுகிறார்கள் தமிழனால் முடியல நீ இந்தியனா என்று கேவலமா கேக்குறான்.அரசியல் இலாபத்திற்காக தமிழன் மற்றவர்களிடம் கேவல பட வைகிறார்கள்
Name : canadianDate :7/18/2010 6:36:54 AM
மேல் கூறிய மற்றைய நாணயங்கள் உலக புகழ் பெற்றவை. இந்த குப்பையை எங்கு கொட்டுவீர்கள்?தன்இனத்தை விற்று பிழைப்பதில் தமிழன் தமிழன்தான்
Name : abcdDate :7/17/2010 9:19:14 PM
உங்களுக்கு வருத்தமாக இருந்தால், தமிழ் நாட்டிற்குள் புதியதாக நோட்டு அடித்து அதில் தமிழ் மொழி குறியீடு பயன்படுத்துங்கள் .. .. என்னடா இடுலக்கூட மொழிப் பிரச்சனைய கெளப்புறீங்க.. போங்கடா.. பொய் புள்ள குட்டிய படிக்க வெய்யுங்க.. அவிங்க எதிர்காலத்துக்காவது உதவியா இருங்க.. வேலை வெட்டி இல்லாம வெட்டி பிரச்சனைய கெளப்பாதீங்க..
Name : muruganandhamDate :7/17/2010 9:12:09 PM
எப்போது மாறும் இந்த ஹிந்தி எதிர்ப்பு ,இதனால் வில்லைத நன்மை என்ன?நம் பிள்ளைகள் பலர் மத்திய அரசு வேலை வாய்புகள் இல்லாமல் போனது,ஏன் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் ஹிந்தி படிகிறார்கள்,அதனால் அவர்கள் பெற்ற பயன் என்ன த்ய்ரியுமா?சீனாவில் எத்தனை மொழிகள் உள்ளனன தேரியுமா?அனால் அவர்கள் மண்டரின் அரசு மொழி?ப்ளீஸ் இந்தியனாக இறுங்கள் மொளிவேருபடுகளை மறந்து நாம் அன்னை வரும் இந்த்யர்கள் என்ற உணர்வுடு இர்ருகவும் ,இதை என்னை போன்று வெளி நாடுகளில் உள்ளவர்கள் நன்கு அறிவார்கள் ஜெய் ஹிந்த்
Name : manuDate :7/17/2010 3:20:22 PM
இது இந்தியனுக்கு தமிழன் வடித்தகுரியீடு தமிழனுக்கு அவன் பணத்துக்குமான குறியீடும் ஒரு நாள் வராமலா போகப்போகின்றது.
Name : தறுதலைDate :7/17/2010 1:40:56 PM
ஸ்ரீநிவாசன் அவர்களே, நான் இந்தியில் பிரேவேசிகா வரை படித்தவன். தாங்கள் சொல்வதையே தான் நானும் சொல்லுகிறேன். ஆனால் பல மொழி பேசும் நாட்டின் பணத்தை குறிக்கும் இலட்சினை ஒருமொழியை சார்ந்து இருக்க கூடாது என்பதே என் வாதம். "ஒரு மனிதனுக்கு எத்தனை மொழிகள் தெரியும் அவன் அத்தனை மனிதர்களுக்கு சமமானவன்"
Name : தறுதலைDate :7/17/2010 1:37:17 PM
நக்கீரனுக்கு நன்றி, இதை பற்றிய எனது இரண்டாவது விரிவான பதிவையும் இட்டுள்ளேன். இந்த முதல் பதிவு செய்தியை கேட்டவுடன் எனது உளக்குமுறல் அவ்வளவே.
Name : தறுதலைDate :7/17/2010 1:36:05 PM
jay இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்று உலகமெல்லாம் கூவிகூவி சொல்லுகிறது. அப்படி சொல்லும் பொழுது அதை கடைபிடிக்கவும் வேண்டும். அதுவே எனது நோக்கம். மும்மொழி கொள்கை எங்கு சென்றது. இல்லை இப்பொழுது உங்கள் சட்டைபையில் இருக்கும் ஒரு ரூபாய் தாளை எடுத்து பாருங்கள் அதில் 15மொழிகளில் அதன் மதிப்பு அச்சடிக்கப்பட்டு இருக்கும். இப்படி இருப்பதை ஏன் தீடிரென்று ஒரு மொழியில் மாற்றுகிறார்கள் என்பதே என் கேள்வி.
Name : Namum TmaliarDate :7/17/2010 7:52:29 AM
first let us save tamils , then tamil will be safe automatically
Name : jayDate :7/16/2010 10:04:30 PM
இது ஒரு குறியீடு. அதுவும் 120 கோடி இந்தியர்களில் நம் தமிழன் செய்த முயற்சி. இந்தியை நாம் வெறுப்பதாக இருந்தால் இந்தக் குறியீட்டை ஆங்கில எழுத்தின் மூலம் என்றே நாம் கொள்ளலாம் தவறில்லை. முற்றிலும் அந்நிய மொழியான ஆங்கிலத்தை அங்கீகரிக்க தயாராகும் நாம் ஏன் இந்திய மொழியின் சாயலில் இருக்கக் கூடாது என்று அடம் பிடிக்க வேண்டும்.குறியீடு என்று அரசு அதிகாரப் பூர்வமாக அறிவிக்கும் பொது அதை மொழி வடிவம்தான் என்று நாம் முரண்டு பிடிக்கத் தேவையில்லை.
Name : M.R.SrinivasanDate :7/16/2010 9:17:48 PM
ofcourse what wrong in this hindi is our india langauage tamilnadu has have is our own tamil. Tamilian must know tamil what ever it is who study in tamilnadu must learn tamil. And also read hindi because if u go beyond tamilnadu we must know hindi we ever u go.u just thing other Tamilnadu all State people know hindi. iam working in dubai even Taxi driver also know that one who does't know hindi he ask our self is a madarsi. And this to bad to us we are going to explan all the people that we coming from Tamilnadu we do't know hindi.So do't separte us Hindi and Tamil. we r all Indians.
Name : IndianDate :7/16/2010 6:39:46 PM
நக்கீரனுக்கு இப்பிடி கொளுத்தி போடறதே வேலை. இத விட்டுட்டு பிள்ளை படிக்க வைங்கயா. சும்மா கப்பி தனமா பேசிகிட்டு.
Name : sakthyDate :7/16/2010 5:34:37 PM
பணம்,பதவிக்காக தமிழன் தமிழனைக் கொல்வான்.இது சமீப காலமாக தமிழர் வாழும் இடங்களில் நடந்து வரும் செயல்களாகும்.ஆரிய ஊடுருவலில் ஆரம்பித்த இந்த செயல்கள் வளர்ந்து கொண்டே வருகிறது.எங்கும் தமிழன் விலை போகிறான்

1 comment:

  1. இது இந்தித் திணிப்பு என்பதிலோ, இந்தியாவின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரானது என்பதிலோ எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அதே நேரம், பதினைந்து மொழிகள் பேசும் ஒரு நாட்டின் பணக் குறியீடு அந்த நாட்டின் ஏதாவது ஒரே ஒரு மொழியில்தானே இருந்தாக முடியும் என்ற கேள்வியிலும் நியாயம் இருக்கிறது!

    ஆகவேதான் சொல்கிறேன், இந்தியா என்கிற இந்த அமைப்பே தவறானது. பண்டைக் காலத்தில் இங்குள்ள ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு நாடாக இருந்தது. அதை மாற்றி நாம் இத்தனை தனித்தன்மைகள் கொண்ட தனித்தனி நாடுகளை ஒரே நாடாக ஆக்கியதால்தான் இப்படிப்பட்ட குழப்பங்கள் ஏற்படுகின்றன. இதனால் இத்தனை தேசிய இனங்களும் ஏதோ ஒரு வகையில் தங்கள் தனித்தன்மையை இழந்து ஒரே இன அமைப்பினராக ஆக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் பதினைந்து தேசிய இனங்கள் அழிந்து இந்தி மொழி இனமும், ஐரோப்பிய இனமுமாக உருமாற வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்! இதுதான் உண்மை! இதை உணராமல் இன்னும் இந்தியா, இந்தியன் என்று கூப்பாடு போடுவது முட்டாள்தனம்! உணர்வார்களா இந்தியர்கள்??

    ReplyDelete