Saturday, July 3, 2010

இணைய இணைப்பில்லா விக்கிபீடியா வந்தாச்சு.


இந்த ப‌திவு "எதிர்நீச்ச‌ல்" வ‌லைப்பூவில் இருந்து ப‌டி எடுக்க‌ப்ப‌ட்ட‌து http://ethirneechal.blogspot.com/2010/06/wiki.html

விக்கலென்றாலும், சிக்கலென்றாலும் டக்கென்று உதவும் தகவல் களஞ்சியம் விக்கிபீடியா. மறுக்கமுடியாது! ஆனால் அதைப் பயன் படுத்த இணைய இணைப்பு வேண்டும் என்று இல்லை. நமது கணினியின் ஒரு அறையில் அத்தனை விசயத்தையும் கொண்டு வரலாம், எப்படி என்றால் விக்கி டாக்சியில் ஏறித்தான். டெல்பி என்கிற அமைப்பு விக்கி டாக்ஸி என்ற மென்பொருளை தந்துள்ளது.
தரவிறக்க இங்கே [at Left corner of this site]

தரவிறக்கிய ஜிப் கோப்பை அன்-ஜிப் செய்து கொள்ளவும்

WikiTaxi.exe என்ற கோப்பை திறந்தால் இது தகவல்கள் இல்லாத வெறும் இயக்கியாக காட்சித் தருகிறது.
அடுத்ததாக இங்கே சென்று நவீன பக்கங்களான "simplewiki-latest-pages-articles.xml.bz2" என்கிற கோப்பை தரவிறக்கிக் கொள்ளுங்கள். இதுதான் தரவுத் தளம்[database] இது தரவிறங்க நேரம் பிடிக்கும்
அடுத்து WikiTaxi_Importer என்ற ஐகானின் மூலம் ஏற்றுமதிப் பெட்டி வரும் அதில் தரவிறக்கிய தரவு தளத்தின் முகவரியைக் கொடுத்து செலுத்தவும். ஏற்கனவே நீங்கள் தரவிறக்கிய கோப்பென்றால் அதன் எக்ஸ்டன்சன் .taxi என்று முடியுமாறு இருக்க வேண்டும். தகவல் தளத்தைப் பொருத்தியவுடன் இப்படி காட்சிதரும்.

இதுவரை செய்தவற்றை ஒரு முறை செய்தாலே போதும். அடுத்து எப்போதெல்லாம் விக்கிப் பீடிய தேவையோ அப்போது WikiTaxi.exe என்ற கோப்பை திறந்து பயன் படுத்தத் தொடங்கலாம். இனி நீங்கள் விரும்பிய சொற்களை தேடலின் உதவியுடன் தேடிக்கொள்ளலாம். முடிந்த அளவு இணைய தேடலுக்கு இணையான தரத்தைத் தரும்.

அடுத்து முக்கியமானது, உங்கள் இணைய இணைப்பில்லா விக்கிப்பீடியாவை புனரமைப்பு செய்ய வேண்டுமென்றால் அதாவது நாளும் வளர்ந்துவரும் விக்கிப்பீடியாவின் புதியப் பக்கங்களை இணைக்க வேண்டுமென்றால் மீண்டும் "simplewiki-latest-pages-articles.xml.bz2" என்ற கோப்பை மேல் காட்டியுள்ள தளத்திலிருந்து தரவிறக்கி மீண்டும் WikiTaxi_Importer மூலம் இணைத்துக் கொள்ளுங்கள்.

மாதத்திற்கு இரண்டு அல்லது ஒருமுறைதான் இந்த புதிய பக்கத்தின் தகவல்களை இந்த கோப்பில் இணைப்பதால், நாம் முன்று மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது தேவைப்படும் போதோ புதிது படுத்திக் கொள்ளலாம்.
இந்த தரவுகளில் தமிழ் விக்கி இல்லைதான் ஆனால் நாம் பயனாளர்களின் தேவை வருங்காலத்தில் பூர்த்தியாகலாம்


இதன் சிறப்பு:
இந்த விக்கியை பயன்படுத்த எந்த இன்ஸ்டலேசனும் இல்லை தரவிறக்கிய கருவியும் தகவல்தளமும்(database) இருந்தால் போதும். இதை சி.டியிலோ, அல்லது பென் டிரைவிலோ கூட பயன்படுத்தலாம். உங்களுக்கு இதை அழிக்க வேண்டுமென்றால் மொத்தமாக இந்த இரண்டையும் எளிதில் அழித்துக் கொள்ளலாம்.

அதன் அதிகாரப்பூர்வ தளம் இங்கே http://www.wikitaxi.org/

No comments:

Post a Comment