Monday, January 10, 2011

சீமான் - காணொளிகள்

    நன்றி:Tamilan Pradeep Kumar Mani நாம் தமிழர் கூகில் குழுமம்
    Seeman - 2011 Videos 
    Seeman - 2010 Videos 
     Seeman - 2009 Videos 
     Seeman - 2008 Videos 
     Seeman - 2007 Videos 
    Seeman - 2006 Videos 

Tuesday, January 4, 2011

சீமான் விடுதலையானார்..

‘பொடா’ - அ.இ.அ.தி.மு.க. பயன்படுத்திய அடக்குமுறை ஆயுதம்; தேசிய பாதுகாப்பு சட்டம் - தி.மு.க. பயன்படுத்தும் அடக்கு முறை ஆயுதம்.  ஜெயலலிதா - அடக்குமுறை சட்டத்தைப் பயன்படுத்தினால், கலைஞர் கருணாநிதி - மனித உரிமை முழக்கமிடுவார். அவரே அதிகாரத்துக்கு வந்து விட்டால், அடக்குமுறைச் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வார்.
 வேலூர் சிறையில் 5 மாதங்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சீமான் சிறைபடுத்தப்பட்டார். அவர் செய்த குற்றம் என்ன? தேசத்தைக் காட்டிக் கொடுத்தாரா? லஞ்சம் வாங்கினாரா? கிரிமினல் குற்றம் இழைத்தாரா? இல்லை; தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைக்குக் குரல் கொடுத்தார். அதைவிடப் பெரும் குற்றம் சிங்களர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். எப்படிப் பொறுப்பார்கள், “தமிழர் தலைவர்”கள்?
 தமிழினப் படுகொலையை நடத்தி முடித்த போர்க் குற்றவாளி ராஜபக்சேவுக்கு உலகம் முழுதும் எதிர்ப்பு வலுக்கிறது. தமிழர்கள் மீது நடத்திய இனப் படுகொலை காட்சிகளை சர்வதேச தொலைக்காட்சிகள் ஆதாரங் களுடன் வெளிப்படுத்தி வருகின்றன. இங்கிலாந்து பிரதமர் ராஜபக்சேயின் போர்க் குற்றங்களை விசாரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவிக்கிறார். அய்.நா.வின் மனித உரிமைக் குழு, ராஜபக்சேவின் மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் முயற்சிகளில் இறங்கி யுள்ளது. சர்வதேசப் புகழ் வாய்ந்த டப்ளின் தீர்ப்பாயம், ராஜபக்சே போர்க் குற்றவாளி என்று அறிவித்துள்ளது.
ராஜபக்சே மோசமான இனப் படுகொலைகளை நடத்தினார் என்று இயங்கையின் அமெரிக்க தூதர், அமெரிக்காவுக்கு அனுப்பிய ரகசிய தகவல்களை, உலகையே வியப்பில் ஆழ்த்தி வரும் ‘விக்கி லீக்ஸ்’ இணைய தளம் அம்பலப்படுத்தியிருக்கிறது.
 இவ்வளவுக்கும் பிறகு ராஜபக்சேயின் மனித உரிமை மீறல்களையோ, போர்க் குற்றத்தையோ, இனப் படுகொலைகளையோ கண்டித்து ஒரு வார்த்தையாவது தி.மு.க. ஆட்சியோ, அதன் முதலமைச்சரோ கூறியது உண்டா? பெரியார், அண்ணாவின் கைப்பிடித்து வந்ததாகக் கூறிக் கொள்வதன் வெளிப்பாடு இது தானா?
 தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒழித்து விட்டதாக ராஜபக்சே அறிவித்த பிறகும், அந்த இயக்கத்தின் மீதான தடையை நீடிக்க வேண்டும் என்று நடுவர்மன்றத்தின் முன் ‘சுப்ரமணிய சாமி’யின் குரலை அப்படியே உள்வாங்கி ஒலித்தது தானே தி.மு.க. ஆட்சி! எனவேதான் இந்த ஆட்சியின் பார்வையில் ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பவர்கள் எல்லாம் ‘தேசத் துரோகிகளாகவே’ தெரிகிறார்கள்.
 தேசத் துரோகிகள் யார்? தேச பக்தர்கள் யார்? என்பதை வரலாறு தீர்மானிக்கும். 8 மாத காலம், இந்த ஆட்சியில் சிறைப்படுத்தப்பட்டதால், தமக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சீமான் வருந்தத் தேவை இல்லை என்பதே நமது கருத்து. அவரது இந்த சிறைவாசம் எதிர்காலத் தமிழினத்தின் விடுதலைக்கான முதலீடாகவே நாம் கருதுகிறோம்.
 புடம் போட்ட தங்கமாக சீமான் கொள்கை உறுதியோடு வெளியே வந்திருக்கிறார். சமூகத் தளத்தில் சாதி, தீண்டாமை, பார்ப்பனியம், மூடநம்பிக்கைகள் என்ற பாம்புகள் படமெடுத்தாடுகின்றன. தமிழனின் நதி நீர் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.
 பன்னாட்டு பனியா சுரண்டல்கள், தமிழனை ஓட்டாண்டியாக்கி வருகின்றன. பெரியார் எடுத்துக் கொடுத்த கொள்கைச் சுடரை ஏந்தி, மக்களை சந்திக்க வேண்டிய லட்சியக் கடமை - சீமான் முன் நிற்கிறது. அதைத் தான் எழுச்சியுற்ற தமிழின இளைஞர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்! சிறைச்சாலை - இந்த துடிப்புள்ள இளைஞனை கூர் தீட்டியிருப்பதாகவே நாம் கருதுகிறோம்.
இந்தக் கைதும் தமிழினத்தின் நன்மைக்கே என்று வரவேற்று சீமானை வாழ்த்துகிறோம்!

Sunday, January 2, 2011

பொறுத்திருந்து பாருங்கள் தம்பி...


பேராசிரியர் சுபவீ அவர்களை அனைவரும் அறிந்திருப்பீர்கள் அவரின் பேச்சும் எழுத்தும் அனைவரையும் கவரும்.. மிக தெளிவான பேச்சும் எழுத்தும் அவருடையது.. அவரை போன்ற முற்ப்போக்குவாதி, பெரியாரியவாதி, ஈழ ஆதரவாளரை கிடையாது.. ஒரு காலத்தில் நான் விரும்பி கேட்க்கும் படிக்கும் பேச்சுக்களும் எழுத்துக்களும் அவருடையது.. ஆனால் இன்று அவர் எழுத்தையோ பேச்சையோ நான் திரும்பி பார்ப்பதுகூட  கிடையாது.. நான் அவரை ஒதுக்க ஒரே விஷயம் தான் அவர் ஈழ ஆதரவு விசயத்தில் கலைஞருக்கு உட்பட்டு இருந்தததுதான்.. என்னதான் அவர் பெரியாரியவாதியாய் இருந்தாலும் நியாயம் பேசினாலும் அவர் கலைஞரின் கைப்பிடி ஆகி அவர் மனம் நோகாதபடி செயல்படுவது தான் மிக பெரிய அசிங்கம்..

இப்பொழுது சுபவீயை பற்றி நான் சொல்வதற்கு காரணம் எப்படி சுபவீ என்ன தான் பெரியாரியவாதியாய், ஈழ ஆதரவாளராய் இருந்தாலும் கலைஞர் மேல் இருக்கும் பாசத்தால் எப்படி மாறி போய் செயல்படுகிறாரோ அதே போல் தான் நம் தம்பி டான் அசோகும்... என்ன தான் முற்போக்குவாதியாய் ஈழ ஆதரவாளராய் இருந்தாலும் கலைஞர் பாசம் அவரை தாறுமாறாய் யோசிக்கவைத்து கோக்குமாக்காய் எழுத வைக்கிறது.. சுபவீயோடு ஒப்பிடும் அளவிற்கு டான் அசோக் பகுத்தறிவுவாதியோ இல்லை ஈழ ஆதரவாளரோ இல்லை என்றாலும் கலைஞர் பாசத்தில் இருக்கும் ஒற்றுமைக்காக ஒப்பிட்டேன்... அழகிரி மகன் திருமணத்தை விமர்சித்தால் கோபம் பொத்துக்கொண்டு பொறாமையில் பேசுகிறார்கள் என்று ஒருபக்க கட்டுரை எழுதுகிறார்.. ராஜாவை விமர்சித்தால் ஸ்பெக்ட்ரம் ஊழல் உயர்சாதி பார்பன ஊடங்கங்களால் திரிக்கப்பட்ட ஒன்று என்று காமெடி வீரமணி போல எழுதுகிறார்.. இந்த ஆட்சி ஏதோ பொற்கால ஆட்சி என்பதை போல் கலைஞரை பற்றி விமர்சித்து எதையுமே எழுத  முன்வராத அவரின் திமுக கலைஞர் பாசம் அவரை சீமானை பற்றி இல்லாததையும் பொல்லாததையும் விஷமத்தோடு எழுத வைக்கிறது.. இதில் ஏதோ பொதுவானவர் என்பதை போல காட்டிகொண்டு எழுதும் பொழுது தான் நாம் அவரின் கட்டுரைக்கு பின்னான தனிப்பட்ட காரணம் பற்றி பேசவேண்டியதை இருக்கிறது...

எப்படி கட்டுரைக்கு பதில் சொல்லாமல் அவரை பற்றி சொலலாம் என்று கேட்கலாம்.. அவர் வைத்த கருத்துகளுக்கு பதில் சொல்லும் முன் அவன் ஏன் இப்படி எழுதினார் என்ற உளவியல் காரணங்களை சொல்லவேண்டும் அல்லவா அதற்க்கு தான்.. 

தம்பி அசோக் வெகுண்டு எழுந்து சீமானை விமர்சிக்க காரணாமாக அவர் முன்வைப்பது சீமான் பெரியாரை ஒரு பேட்டியில் விமர்சித்தார் என்பது தான்... சரி அப்படியென்றால் தம்பி அசோக் அப்பழுக்கற்ற பெரியாரியவாதியா என்று நீங்கள் யோசித்தால் அதும் கிடையாது தாங்கள் வாங்கிய புது வாகனத்திற்கு சந்தானம் குங்குமம் வைத்து டயருக்கு அடியில் எலும்பிச்சை வைத்து வழிபட்டு வானகத்தை எடுக்கும் அளவிற்கு தான் அவர் பகுத்தறிவு இருக்கிறது..  பிறகு எங்கிருந்து வந்தது பெரியார் பாசம் என்று யோசிப்போமானால் மஞ்சள் துண்டு போட்டுகொண்டு பகுத்தறிவு பேசும் கலைஞர் பாசம் தான் பெரியார் பாசமாக நீள்கிறது என்று தெரிந்துகொள்ளலாம்..

 தம்பி அசோக் சீமான் எல்லாம் தலைவரா என்று கேட்டு  வெகுவாக வருத்தபடுவது இந்த சமுதாயம் தவறான தலைவனை தேர்ந்தெடுக்க கூடாது என்ற எண்ணத்தில் தான் என்றால் அவர் முதலில் எதிர்த்திருக்க வேண்டியது இவர் அண்ணன் அழகிரி மற்றும் ஸ்டாலினையா இல்லை சீமானையா?... திமுகவின் வாரிசு அரசியலை பற்றி எதுவுமே எழுதாத அசோக் சீமானின் அரசியலை பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது என்ற கேள்வி தானாக வருகிறது ஆனால் திராவிட அரசியல் பாரம்பரியத்தில் வந்தவர்களுக்கு அதெல்லாம் கவலை இல்லை சீமான் போன்ற தனி மனிதன் தானாக தமிழ் தேசிய இயக்கம் கட்டி வந்து திமுகவை அம்பலபடுத்தினால் கோவம் மட்டும் வரும்... அதை எழுத்தில் விசமாய் வடிப்பார்கள் இந்த நவீன பகுத்தறிவு போலிகள்...

படம் எடுத்து கொண்டிருந்த சீமானுக்கு எப்படி திடீரென்று ஈழ ஆதரவு, தமிழ் பற்று வந்தது என்று விசனபடுகிறார் தம்பி அசோக்.., மே 2009 முள்ளிவாய்க்கால் கொடூர நிகழ்வு நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுது  "ரஜினி ரஜினிதான்" என்று ரஜினியை வானளாவ புகழ்ந்து அதிமுக்கியமான அவசியமான ஆய்வு கட்டுரை எழுதுவார் தம்பி ஆனால் இவரிடம் தமிழ்பற்று, ஈழ ஆதரவு இருக்கிறது என்று நாம் நம்பவேண்டும்...  தமிழ் பற்றாளர் என்று நாம் நம்பவேண்டும்... ஆனால் பல ஆண்டுகளாக எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் குடுத்த மேடைகளில் எல்லாம் தமிழ் ஈழம், தமிழர் நலம் என்று முழங்கிய முழங்கும் சீமானுக்கு இல்லை என்று சொல்வார் அதை நாம் எதிர்த்து கருத்துரைத்தால் நம்மை ரஜினி ரசிகர் போல தாக்க வருகிறார்கள் என்று கதை சொல்வார்.. அவர்கட்டுரைகளை ஒரு தரம் அவர் மீள்வாசித்தால் ஒரு நடிகனுக்கு ரசிகனாய் யார் இருக்கிறார் என்று தெரியும்..

சீமானை விமர்சிக்க கூடாதா என்று விமர்சித்தால் நான் திமுககாரனாக காட்டுவதா என்று கோபப்படுகிறார் தம்பி.. தாரளாமாய் விமர்சிக்கலாம்... அரசியல் ரீதியாக விமர்சனம் செய்யலாம் அவர் அரசியல் முடிவை விமர்சனம் செய்யலாம் ஆனால் அவர் அரசியலுக்கு வருவதே தவறு என்று  முடிவெடுத்து பேசும் பொழுது தான் அவரின் சீமான் எதிர்ப்பிற்கு என்ன காரணம் என்று சொல்லவேண்டி இருக்கிறது..

சீமான் பற்று எங்களிடத்தில் அறவே இல்லை, நாளை சீமான் தமிழ் தேசியத்தில் நழுவினால் அடுத்த நொடியே அவரை விட்டு விலகுவோம் நாங்கள்.. எங்களை சீமான் பற்றாளன் என்கிறார் தம்பி... அவர் எங்கள் தமிழ்தேசிய பற்றை சீமான் பற்று என்று சொல்லும் பொழுது நாங்கள் அவர் சீமான் எதிர்ப்புக்கு காரணம் கலைஞர் பற்று தான் சொன்னால் மட்டும் கோவம் வருகிறது அவருக்கு.. ராசாவை விமர்சித்ததும் உடனே மாங்கு மாங்கென்று அவரை ஆதரித்து தம்பி கட்டுரை எழுதியதற்கு காரணம் என்னவோ அதே தான் சீமானை விமர்சிக்கும் பொழுது நாங்கள் வந்து மறுத்து கருத்து சொல்வதற்கும் காரணம்.. கோடி கோடியாய் கொள்ளை அடித்தவருக்கு வக்காலத்து வாங்க அவரை போன்ற ஆட்கள் இருக்கும் பொழுது கொள்கைக்காக சிறை செல்பவருகாக எங்களை போன்ற ஆட்கள் வரத்தானே செய்வார்கள் ...

சீமான் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செய்ததை சொல்லும் அவர் அதற்க்கு முன்னரே இம்மானுவேல் சேகரனுக்கு சென்று மரியாதை செய்ததையும் அவர் விமர்சனத்தில் வைந்திருந்தால் நேர்மையாளன் அவர்.. ஆனால் திட்டமிட்டு அதை மறைக்க காரணம் அவர் உள்மனதில் இருக்கும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியே அன்றி வேறில்லை.. அதற்க்கு பிறகு அயோத்திதாசபண்டிதர்க்கு மரியாதை செலுத்தினார்கள் நாம் தமிழர்கள்... இனியும் மறைந்த அனைத்து  சமுதாய தலைவருக்கும் செலுத்துவார்கள்..சீமான் உருவாக்கிய இயக்கம் அனைத்து தமிழர்களுக்கானது ஒரு சமுதாயதிற்க்கானது இல்லை... சரி முத்துராமலிங்க தேவர் சமாதிக்கு செல்வது பெரியாரியத்திற்கு எதிரானது என்றால் அவர் முதலில் விமர்சனம் செய்யவேண்டியது பெரியாரை வைத்து ஆட்சிக்கு வந்து இன்று அரசு செலவில் குருபூஜை செய்யும் திமுக அரசையா இல்லை சீமானையா?.. கடந்த 30 வருடமாக முத்துராமலிங்க தேவர் குருபூஜை நடக்கிறது அவர் முற்போக்குவாதியாய் கட்டுரை எழுத வந்து ஒரு ஐந்து ஆறு ஆண்டுகள் இருக்கும்.. தேவர் சமாதிக்கு செல்வது தவறு என்று அவருக்கு இப்பொழுதான் தெரிந்ததா? சீமானுக்கு முன் எத்தனையோ திராவிட தலைவர்கள் சென்றார்களே அப்பொழுதெல்லாம் தெரியவில்லையா???  இப்பொழுது கொதித்து எழுந்து கட்டுரை எழுதியது போல் அப்பொழுதெல்லாம் அவர் எழுதவில்லையே?..

எப்படி பெரியாரின் பேரன் என்று சொல்லிக்கொண்டு ஜெயலலிதாவை ஆதரித்தார் என்கிறார் தம்பி..? பெரியார் தோற்றுவித்த திராவிடத்தின் வழி வந்த ஒரு திராவிட கட்சிக்கே பார்பனிய ஜெயலலிதாதான் தலைவர் என்று அவர் மறந்துவிட்டார் போல..  போன தேர்தல் நடக்கும் பொழுது போர் ஈழத்தில் உக்கிரத்தில் இருந்தது ஏதாவது செய்து போரை நிறுத்திவிட மாட்டோமா என்று அனைவரும் ஒவ்வொருபக்கம் முயற்சித்தார்கள். காங்கிரஸ் கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஈழத் தமிழர்களுக்கும் இயக்கத்திற்கு மிக பெரிய அழிவு ஏற்ப்படும் என்று தான் அதற்க்கு எதிரான கூட்டணிக்கு வாக்கு கேட்டார்கள் ஈழ ஆதரவாளர்கள்.. அதிமுக கூட்டணிக்கு அதரவாக சீமான் மட்டும் ஒட்டுகேட்கவில்லை பெரியார் திராவிடர் கழகமும் ஒட்டு கேட்டது.. இது அவரின் பேரறிவுக்கு தெரியுமா என்று தெரியவில்லை... ஒன்றாக மேடைகளிலேயே பெரியார் திராவிடர் கழகத்தினர் முழங்கினர்... பெரியார் திராவிடர் கழகத்தினருக்கு என்ன நோக்கம் இருந்ததோ அதே நோக்கம் தான் சீமானுக்கும் அப்பொழுது இருந்தது..

சீமான் கருப்பு சட்டைகாரர்களுக்கு பயந்தோ பதறி போயோ பெரியார் எம்.ஜி.யார் ருக்கு வீர வணக்கம் செலுத்த பொதுக்கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் இங்கு என்ன வந்தது என்று தான் புரியவில்லை,  சீமான் சிறையில் இருந்து வெளிவந்த பின் பெரியார் முழக்கத்தில் சீமான் விடுதலையானார் என்ற அறிக்கையை தம்பி படிக்க வில்லை (படிக்க பிடிக்க வில்லை) போலும் கருப்பு சட்டை காரர்கள் தெளிவாக தங்களுக்கு சீமான் மேல் உள்ள நம்பிக்கையும் எதிர்பார்ப்பையும் தெள்ளத்தெளிவாக அறிக்கையாக வைத்துள்ளனர். ஆதலால் தம்பி சிரம்ம பட்டு தற்போது கருப்பு சட்டைகாரர்களும் சீமானுக்கும் முரண்பாடு உள்ளதாக திரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

போலி இந்திய தேசியத்திற்கு காவடி எடுக்க திராவிட தலைவர்கள் எல்லாம் போட்டி போட்டுகொண்டிருக்கும் பொழுது ஒரு தனி மனிதன் எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் திராவிடம் என்ற கருதுகோளுக்கு  மாற்றாக இளைஞர்களை சேர்த்து இனத்திற்காக இயக்கம் கட்டி இந்திய தேசியத்தை எதிர்த்து தமிழர்கள் நலனை பேசினால் வயிற்ரேரிச்சலில் அடிவயிறு தம்பி போன்றவர்களுக்கு எரிவது ஏன் என்பது யோசிப்போமாயின் அவர்களின் போலி திராவிட பாசம் ஒழிய வேறொன்று இருக்க வாய்ப்பில்லை என்றே கருதவேண்டி இருக்கிறது.. தான் இந்திய தேசியத்தை எதிர்ப்பதையும் சுட்டிக்காட்டுகிறார் தம்பி அசோக்... வீரமணி கூடத்தான் காங்கிரசிற்கு ஒட்டு கேட்டுகொண்டே இந்திய தேசியத்தை எதிர்த்து பேசுகிறார் அது போல தான் இவர் பேசுவதும்...  நாம் தமிழரின் தமிழ்த்தேசியம்  என்றைக்குமே இதை போன்ற போலி திராவிடத்தையும் இல்லாத இந்திய தேசியத்தையும் நேர்மையாக எதிர்க்க தான் செய்கிறது.. அந்த நேர்மை சீமானிடம் இருக்கும் வரை அவரோடு கைகோர்த்து செயல்படுவதில் எந்த மாற்றுக்கருத்தும் எங்களுக்கு இல்லை..தொடர்ந்து செயல்படுவோம்.. இதற்க்கு அடிமை என்று பெயர் சூட்டுவதுதான் தம்பியின் பகுத்தறிவு என்றால் நாம் அதற்க்கு ஒன்றும் செய்ய முடியாது..

நிகழ்காலத்தில் நேர்மையான பாதை நிலையான கொள்கை அர்ப்பணிப்பு மூன்றும் தான் முடிவு செய்யும் சீமான் முன்னிறுத்தும் தமிழ்த்தேசியத்தின் எதிர்காலத்தை.. இந்த நிமிடம் வரை அந்த நேர்மையும் நிலையான கொள்கையும் அர்ப்பணிப்பும் சீமானிடத்தில் இருக்கிறது என்பதை ஆணித்தராமாக என்னால் சொல்ல முடியும்.. கடைசியாய் ஒன்றே ஒன்று தான்... பொறுத்திருந்து பாருங்கள் தம்பி எங்கள் வெற்றியை...